ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு..! தெரிவோம் அறிவோம் 2
ஒன்றிய அரசின் 17 உயர் அதிகாரிகள் பணியிடங்களில், தனியார் துறையினரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
முதன் முதலாக 2018ம் ஆண்டு 10 இணைச்செயலாளர்கள் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். 2021ம் ஆண்டு இணைச்செயலாளர், துணைச்செயலாளர் மற்றும் இயக்குனர் என 31 பேரை பொறுப்பில் அமர்த்தியுள்ளனர்.
3வது முறையாக 20 பணி இடங்களை நிரப்ப, ஒன்றிய அரசு அறிக்கைவெளியிட்டுள்ளது. 4 வது முறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் நீதித்துறை என 6 துறைகளில் 17 பணி இடங்களை நிரப்புவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சேர்க்கை இன்னும் 1 மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும் எனவும் கூறியுள்ளது.
Discussion about this post