உங்கள் ஊரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!! படிக்க மறக்காத்தீங்க..!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்துார் அடுத்த பாரண்டப்பள்ளி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா கொண்டாடுவது வழக்கம்.மேலும் மாரியம்மன் பண்டிகை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திற்கு வெளியே சென்று ஓர் இடத்தை தேர்வு செய்து காலை முதல் மாலை வரை அங்கே தங்கி சமைத்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு பிறகு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி வரும் 15ம் தேதி நடக்கவிருக்கும் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு கிராம மக்கள் இந்த வினோத வழிபாடை செய்து மகிழ்ந்தனர். இந்த வழக்கத்தை கிட்டத்தட்ட நுாறு ஆண்டுகளுக்கு மேல் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இந்த ஒரு நாள் மட்டும் தங்கள் கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் இங்குள்ள அனைத்து வீடுகளும், கடைகளும் மூடி இருக்கும். காலையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு கோயில் அருகே வருவார்கள்.அவர்களை மேளதாளத்துடன் ஊர் மேற்கு பகுதிக்கு அழைத்து செல்வார்கள்.
அதன்பிறகு ஏதோ ஒரு இடத்தை தேர்வு செய்வார்கள். அங்கு அவர்கள் சமைக்கும் போது அதில் இருந்து வெளியேரும் புகை கிராமம் நோக்கி செல்லும். இதனால் கிராமத்தில் உள்ள துஷ்ட சக்திகள் விலகும் என்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையே அனைவரும் கவலைகளை மறந்து ஒருவருடன் ஒருவர் பேசி விளையாடி மகிழ்வார்கள்
கரூர் மாவட்டம் :
கரூர் ஆனந்த் செஸ் அகாடமி சார்பாக 11-வது மாநில அளவிலான சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான மாநில அளவிலான சுதந்திர தின கோப்பைக்கான செஸ் போட்டி நடைபெற்றது. கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டியில் 8 வயது, 10 வயது, 12 வயது, 17 வயதுடைய சிறுவர், சிறுமியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, சேலம், கோவை, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, கரூர் டெக்ஸ் பார்க் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் முடிவுற்ற நிலையில் நான்கம் ஆண்டு தொடக்கத்தில் சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து மருந்து மாத்திரை களை மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் கால விரையம் மற்றும் பணமும் சேமிக்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டி மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தின சாமி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கபட்டிருந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சென்னை ஆயுதப்படை ஐஜி லட்சுமி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய போலீஸ் கமிஷனராக லட்சுமி ஐபிஎஸ் பொறுபேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர், மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொடர்ந்து மாநகர் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் பசலிக்குட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுதூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த நிலையில் தங்களுடைய பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு அதே பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடை திறப்பு விழா மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா மற்றும் திம்மணாமத்தூர் பகுதியில் வேளாண் நிதி நிலை அறிக்கை 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலர்களத்துடன் கூடிய தரம்பிரிப்புகூடம் திறப்பு விழா உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு ரிப்பன்வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட திட்ட அலுவலர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும், ஒன்றிய குழு தலைவர் மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் , வார்டு உறுப்பினர் ஊராட்சி செயலர் திமுக கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையம் செல்லும் இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினால் அச்சாலையில் பயணிக்க கூடிய பெண்கள் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மது பிரியர்களால் பல்வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால் மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுபான கடையினை உடனடியாக அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் வருகை தந்து ஆட்சியரிடம் மனுவினை வழங்கியுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..