அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செயலாளரிடன் பேக்கை திருடிய சட்டவிரோதமாக குடியேறியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் உள் நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளராக கிறிஸ்டி நோயம் உள்ளார். இவரது துறைதான் அமெரிக்காவில் சட்டவிரேதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துகிறது. கடந்த 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை முனிட்டு வாஷிங்டனிலுள்ள கேபிடல் பர்கர் ஹோட்டலில் குடும்பத்துடன் உணவு சாப்பிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவர் வைத்திருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கைபை காணாமல் போனது. இந்த பேக்கில் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வீட்டு சாவி போன்றவை இருந்துள்ளது. இதையடுத்து, வாஷிங்டன் போலீசில் கிறிஸ்டி புகாரளித்தார். இந்த நிலையில், பேக் திருடியதாக மரியா லேவா என்ற 49 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டனில் மிகப் பெரிய திருட்டு கும்பல் நெட்வொர்க்குடன் மரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கிறிஸ்டி நோயம் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சட்டவிரோதமாக குடியேறி திருடுவதை தொழிலாக கொண்டவர் பிடிபட்டுள்ளார். அதுவும் பல ஆண்டுகளாக சட்டவிரேதமாக நம் நாட்டில் இருந்துள்ளார். இவரால் ஏராளமான அமெரிக்க குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால்தான்,இவர்களை போன்றவர்களை வெளியேற்றி, நாட்டை பாதுகாப்பானதாக மாற்ற அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.