பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டா உறுப்பு செயல் இழக்குமா..?
பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி பயன்படுத்தினால், இந்த உறுப்புக்கள் செயலிழந்து போகும் அபாயமுள்ளது.
பாராசிட்டமால் அடிப்படை வியாதிகளான தலைவலி, பல் வலி, பிடிப்புகள் மற்றும் சளி, ஜலதோஷத்தால் ஏற்படும் காய்ச்சலைக் குறைக்கவும் உதவுகிறது. மருத்துவர்கள் காய்ச்சல், தலைவலிக்கு முதலில் பரிந்துரைப்பது பாராசிட்டமால் மாத்திரையை தான்.
ஆனால் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்தால், அது மிகவும் ஆபத்தானது. தற்போது , நிறைய பேர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்றவற்றால் அதிகம் அவதிப்படும் நிலையில், மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே பாராசிட்டமால் மாத்திரைகளை பலர் பயன்படுத்துகின்றனர்.
அதே நேரம் பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் எடுத்துக்கொண்டால் , பக்க விளைவுகளை சந்திக்க கூடும் .
இரத்தக்கசிவு ஏற்பட்டு, அவை தொடர்பான சிக்கல்களால் அதிகம் அவதிப்படக்கூடும். இவற்றை ஆஸ்பிரின் போன்ற பிற மருந்துகளுடன் உட்கொள்ளும் போது, இன்னும் மோசமாகும்.
அலர்ஜி பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புண். அதுவும் சருமத்தில் தடிப்புகள், கடுமையான அரிப்புகள் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை வரும் .
இரத்த சோகை ஏற்படும் . ஒருவருக்கு இரத்த சோகை வந்துவிட்டால், உடலுறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது , இதனால் மிகுந்த உடல் சோர்வும் , பலவீனமும் உணர்வார்கள்.
முக்கியமாக கல்லீரல் சேதம் உண்டாகும். சில சமயங்களில் கல்லீரல் செயலிழப்பை கூட உண்டாக்கும். கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும், அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருக்கும்.
அடிவயிற்று வலியை சந்திக்கக்கூடும். முக்கியமாக இந்த அறிகுறிகள் காலப்போக்கில் மஞ்சல் காமாலையாக மாறக்கூடும் .
அதிகப்படியான வியர்வை, பசியின்மை, வாந்தி, குமட்டல், வயிற்று பிடிப்புகள்/வலி, மேல் வயிற்று வீக்கம் வலியை சந்திக்க நேரிடும்.
பாராசிட்டமால் பயன்படுத்தும் முறைகள் :
1. பாராசிட்டமால் மாத்திரையை அதன் வேலையை தொடங்க 1 மணிநேரம் எடுக்கும்.
2. அதிகப்படியான காய்ச்சலுக்கு 2 பாராசிட்டமாலுக்கு மேல் எடுக்கக்கூடாது.
3. ஒரு நாளைக்கு பெரியவர்கள் 4 மாத்திரை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். 4 மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை எடுக்க வேண்டும்.
4. சிறியவர்கள் 2 மாத்திரை மட்டும் எடுக்கலாம் .அதுவும் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம் .
5. கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது பாராசிட்டமாலை எடுப்பது நல்லது தான். ஆனால் அதுவும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தான் எடுக்க வேண்டும்.
மேற்படியான தொந்தரவுகள் இருந்தால் ,மருத்துவரை அணுகி சரியான காரணத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறு மருந்துகளை உட்கொள்ளவேண்டும் .
Discussion about this post