சென்னையை தவிர பல மாவட்டங்களில் 10 மற்றும் 20 ருபாய் நாணயங்களை வாங்குவதில் பொதுமக்களிடம் தயக்கம் இருந்து வருகிறது. போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்ததால் 10 மற்றும் 20 ருபாய் நாணயங்களை மக்கள் பயன்படுத்த மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை 10 மற்றும் 20 ருபாய் நாணயங்களை வாங்கமறுத்தால் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ருபாய் நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் போக்குவரத்து துறை புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது
போக்குவரத்து துறை கூறுகையில், பயணிகளிடம் இருந்து எக்காரணம் கொண்டும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது அவ்வாறு வாங்க மறுத்து புகார்கல் வந்தால் சம்மந்தப்பட்ட அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரித்துள்ளது.