இப்படி சாப்பிட்டால் நீங்களும் ஜொலிக்கலாம்..!!!
அனைவருக்குமே சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆர்வமுடையது.
அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முகம் அழகாகவும் , புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கரை காட்டுவார்கள்
அந்த வகையில் என்ன சாப்பிட்டால் சருமம் பொலிவாக இருக்கும் என்பதை பார்ப்போம்.
இளநீர் குடிப்பது சரும சுருக்கங்களை சரிசெய்யும்.
அன்றாடம் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.
நல்ல சுத்தமான மலைத் தேன் தொடர்ந்து சாப்பிட்டால் , சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வைட்டமின் சி உள்ள பழங்களை சாப்பிட்டால் சருமம் பொலிவடையும்.
இரவு 5 பாதாம் வீதம் ஊற வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் , சரும வறட்சி வராது.
உடல் முழுவதும் நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வர , உடல் சூடு குறைந்து சருமம் பொலிவாக இருக்கும்.
கற்றாழை சாற்றை வாரத்தில் இரண்டு முறை சருமம் மற்றும் தலை முடியில் தேய்த்து குளித்து வரலாம்.
மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றை முகத்தில் பூசி வந்தால் சரும கருப்பு குறைந்து சருமம் பொலிவடையும்.
வாழைப்பழம் , ஆப்பிள் , கொய்யா , பப்பாளி , ஆரஞ்சு , மாதுளை போன்ற பழங்கள் சரும பொலிவிற்கு மிகவும் உதவும்.
புளத்த தயிர் எடுத்து வாரம் இரு முறை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்கலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..