மாணவர்களின் படிப்பிற்காக ஐ.பி.எஸ் அதிகாரி செய்த பாராட்டு செயல்..!!
கிராம புற கல்லூரி மாணவர்களின் கல்வி செயல்திறனை அதிகரிபதற்காக மாணவர்களுக்கான புதிய நூலகம் ஒன்றை அமைக்க தனது பெற்றோர் வாழ்ந்த பூர்விக வீட்டை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளார்..
சென்னை தாம்பரம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருப்பவர் “ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி” பெற்றோர் இறந்து போனதால் அவர்கள் வாழ்ந்த வீட்டையே நினைவகமாக மாற்ற விரும்பிய இவர்..,
திண்டுக்கல் மாவட்டம் வக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்த இவர்.., அந்த கிராம மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் வாழ்ந்த பூர்விக வீட்டையே இலவசமாக கொடுத்துள்ளார்..,
மேலும் அதற்கு “பாலா படிப்பகம்” என அவரின் தந்தையின் பெயரை வைத்து அழகு பார்த்துள்ளார்.., இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..