சனிக்கிழமை பெருமாள் தரிசனம் செய்தால் கிடைக்கும் வரம்..!!
சனிக்கிழமை தோறும் காலை குளித்து முடித்ததும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, துளசி மாலை வாங்கி சென்று தீப ஆராதனைக்கு கொடுக்க வேண்டும். தொடர்ந்து 9 வாரங்கள் இதை செய்தால், பணவரவு பெருகும்.
சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது பிரசாதமாக, கொண்ட கடலை, மூக்கடலை, புளியோதொரை, தயிர் சாதம், கேசரி, சர்க்கரை பொங்கல், ஏதாவது சமைத்து பிரசாதமாக கொடுக்கலாம். அல்லது கற்கண்டு, அவல், பொட்டுக்கடலை கலந்து பிரசாதமாக கொடுக்கலாம்.
பிரசாதம் கொடுப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்கிறதோ, அதே அளவிற்கு மன அமைதியையும் கொடுக்கும். முக்கியமாக சுயமாக தொழில் செய்பவர்கள் வாரந்தோறும் தவறாமல் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை வைத்து பிரார்த்தனை செய்தால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
வீட்டில் பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதை விட, கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..