அண்ணாமலை கிட்ட மோதுனா மண்ணாகி போயிடுவீங்க..!! எடப்பாடிக்கு மிரட்டல் விட்ட பாஜக..! அடுத்த லிஸ்ட்ல நீங்க தான்..!!
அண்ணாமலையுடன் மோதி நீங்கள் மண்ணாகி விட வேண்டாம் என எடப்பாடிக்கு பாஜக பகிரங்க மிரட்டல் விட்டுள்ளனர். இந்த மிரட்டல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வணக்கம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இரண்டாம் கட்ட தலைவர் செல்லூர் ராஜ், மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். எங்களின் இயக்க தலைவர் ஜெயலலிதா போல எங்களை நினைத்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலை விமர்சிப்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சுக்குநூறாக நொறுங்கி போன அதிமுகாவை.., பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் தங்களின் தோழமை இயக்கம், என அனைவரையும் ஒன்றிணைத்து சட்ட சபையில் 66 எம்.எல்.ஏ வுடன் இடம் பெற வைத்த நன்றியை மறந்தவர்கள்.
பின் வரும் காலங்களில் உங்களால் கூட்டணியின்றி வாக்காளருக்கு பணம் கொடுக்காமல் உங்களால் பாஜகவுடன் போட்டியிட முடியுமா..? உங்களின் பலம் என்ன பலவீனம் என்ன என அனைத்தும் எனக்கு தெரியும். நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வோம் ..,
அண்ணாமலையுடன் மோதி நீங்கள் மண்ணாகி விட வேண்டாம், அப்படி மோதினால் அதிமுகாவின் ஊழல் பட்டியிடலை நாங்கள் வெளியிடுவோம்.., நீங்கள் செய்த ஊழல் எது எவ்வளவு என்று உங்களுக்கு மட்டும்மல்ல எங்களுக்கும் தெரியும்.., அதை நாங்கள் வெளியிடுவதும் வெளியிடாமல் இருப்பதும் உங்கள் கையில், என எடப்பாடியை எச்சரிக்கிறேன் என பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் கூறியுள்ளார்.
Discussion about this post