முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் ஒப்பந்த கையெழுத்திட்ட கோத்ரேஜ் நிறுவனம்..!! பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் கோத்ரெஜ் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. அதன் பெயரில் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முன் இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகதுறை சார்பில் தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரெஜ் நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது..,
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் கன்ஸ்யூமர் விற்பனை பொருள்கள் மற்றொரு உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தம் தற்போது தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி அடுத்த தொழில் முனைவு என்ன.., இளைஞர்கள் வேலைவாய்ப்புகான திட்டங்கள் என பலவும் ஆலோசித்து செயல்படும் ஆலோசனை கூட்டமும் அதில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோத்ரெஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனம் 515 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் 446 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒப்புதலும் மேற்கொள்ள பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில் துறை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
Discussion about this post