பிரா வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!
பெண்கள் பிரா அணிவது மட்டும் முக்கியமில்லை அதை அவர்கள் சரியான சைஸில் வாங்கி அணிவது தான் மிகவும் முக்கியம். அப்படி சரியான அளவில் பிரா பயன்படுத்தவில்லை எனில் பலவித பிரச்சனைகள் உண்டாகிறது.
இதனை தடுக்க பிரா வாங்கும்போது சரியான அளவில் வாங்க என்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.
Non Padded பிரா அணிவது:
புதிதாக பிரா வாங்கும்போது non padded பிரா அணிவது மிகவும் முக்கியம். அப்போது தான் அளவினை துல்லியமாக எடுக்க முடியும்.
padded பிரா அணிந்தால் அளவுகள் சரியாக எடுக்க முடியாது.
நல்ல டேப்:
பிரா வாங்கும்போது அளவெடுக்கும் டேப் நல்லதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அது ரொம்ப பழைய டேப்பாக இருந்தால் தளர்ந்து போயிருக்கும் அதனால் சரியான அளவு வராது.
எனவே பிரா வாங்க அளவு எடுக்கும் டேப் புதிதாக இருப்பது அவசியம்.
மார்பளவு எடுத்தல்:
மார்பின் சுற்றளவை அளவு எடுக்கும்போது சிலர் ரொம்ப டைட்டாக அளவு எடுப்பார்கள் அது மிகவும் தவறு.
நீங்கள் அணிந்திருக்கும் பிராவை ஒட்டியே வைத்து அளவு எடுத்தாலே போதுமானது.
பொருத்தமான பிரா:
நீங்கள் பிரா வாங்கும்போது அளவு கூடவோ குறைவாகவோ இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து வாங்க கூடாது.
எடுத்து சென்ற அளவில் சரியாக பிரா வாங்குவது நல்லது.
பிரா மாடல்:
பிராவில் நிறைய மாடல் இருக்கிறது. padded, non padded, full coverage, half coverage, straps, strapless, sports பிரா என வகைகள் இருக்கிறது.
பலருக்கும் பலவித பிரா பிடித்திருக்கும் ஆனால் அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என பார்த்து வாங்குவது சிறப்பு.
