தீப ஆராதனையின்போது கற்பூரம் அணைந்தால் அது..!!
இயல்பாகவே பலருக்கும் பல ஆன்மீக சந்தேகங்கள் இருக்கும். அப்படி எனக்குள் ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை ஆன்மீகத்தில் உச்சி பெற்று ஒருவரிடம் கேட்டு.., உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறோம்.
அதாவது கோயில் மற்றும் வீடுகளில் தீப ஆராதனையின் போது கற்பூரம் அணைந்தால் என்ன செய்வது என்று தெரியாது. மேலும் கற்பூரம் அணைந்தால் அது அபசகுணம் என பலரும் நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் கற்பூரம் அணைந்தால் அது அபசகுணம் இல்லை.
அப்படி அணையும் பொழுது அந்த கற்பூரம் இல்லாமல் வேறு கற்பூரம் எடுத்து மாற்றி பூஜை செய்வது நல்லது. மேலும் கற்பூர ஒளியில் இறைவனின் உருவம் இன்னும் அழகாய் தெரியும் என சொல்லுவார்கள்.
வீட்டில் கற்பூரம் காட்டும் பொழுது வீட்டில் பூஜை அறையில் மாட்டி இருக்கும் சுவாமி படங்கள் மிக அழகாய் தெரியும். அதேபோல் கற்பூரம் எரிந்து முடிந்த உடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது.
அந்த கற்பூரம் உணர்த்துவது என்னவென்றால் அறியாமை என்னும் இருள் மறைந்து ஞானம் பெற வேண்டும் என்பது ஆகும். மேலும் கருவறையில் இருக்கும் இறைவனின் சிலை கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலரூபம் அடர் கருமை நிறத்துக்கு மாறிவிடும்.
இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது. மேலும் சுவாமி மீது தீபம் காட்டும் போது நமது முழு கவனமும் சுவாமி மேலேயே இருக்கும். அந்த நேரத்தில் கடவுளை தரிசனம் செய்யும்போது எல்லோருடைய எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும்.
அப்போது இறையருள் பெறுவது மட்டுமே நமது குறிகோளாக இருக்கும். மேலும், இறைவனுடைய சக்தியை இந்த ஒளி வடிவத்திலே நாம் பெற்று கொள்வதாகவே ஐதீகம் இருக்கிறது. கற்பூரம் தன்னை அளித்து கொண்டு ஒளி தருகிறது.
அதே போல் நாமும் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அதை ஒலித்து நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ இந்த கற்பூரம் ஒரு சாட்சியாக இருக்கிறது. ஆதலால் எதுவும் அபசகுணம் இல்லை.ஒவ்வொரு விஷயம் பின்னாளில் ஒவ்வொரு பாடம் இருப்பதை நாம் உணர வேண்டும்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..