சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்காக கட்டுபடுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். இதனால் ஐயப்பன் கோவிலின் தரிசன நேரத்தை நீடிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக இருந்தது கடந்த 9ம் தேதி 1,10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் கடத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழல் உருவானதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனத்திற்கு நேரத்தை நீட்டி அனுமதியளிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொர்ந்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு இரவு 11:30 மணி வரை நேரத்தை நீட்டி அனுமதித்துள்ளது. மேலும், தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதால் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.