“தம்பி விஜய்காக ஓடோடி வருவேன்..” இப்போவே சீமான் போட்ட பிட்டு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கு நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது… அதன் வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கொண்டாடினார்., அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மறுபக்கம் 2026 சட்டசபை தேர்தலில் தம்பி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருந்தால் அது கட்டாயம் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. தற்போது தமிழக வெற்றிக் கழகமானது அரசியலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கட்சியாக மாறியுள்ளது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்., அதன் பிரத்யேக அறிவிப்புகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டு இருந்தார்..
அதே சமயம் அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கான உரிமையை தமிழக காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.. இந்த மாதம் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது..
இந்த அறிக்கைகள் வெளியான நிலையில் “தடைகளை தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கான அரசியல் கட்சியாக வலம் வருவோம்” என அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்..”
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். என இவ்வாறே பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் தளபதி விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு
தம்பி விஜய் கட்சியின் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தால் நான் நிச்சயம் செல்வேன்., வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஒன்று சேர வாய்ப்பு கிடைத்தால் அதற்காக காத்திருக்கிறேன் என்றும் தான் சொல்ல வேண்டும் என, சீமான் பதில் அளித்துள்ளார்.
தளபதி விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே அக்கட்சிக்கும் அவருக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் தளபதிக்காக குரல் கொடுத்தும்., ஆதரவாக பேசியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமையுமா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தம்பி விஜய் கூப்பிட்டால் ஓடோடி வருவேன் என பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..