வரிசையில் நிற்கவில்லை அதனால்..! கழுத்தில் ஏற்பட்ட காயம்..!!
நியாவிலை பொருட்கள் வாங்குவதற்காக வரிசையிக் நின்று கொண்டிரந்த மக்களை மிரட்டி முன்வரிசைக்கு சென்ற நபரை தட்டகேட்ட நபர் தாக்கபட்டுள்ளார்..
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் 27 இவர் நேற்று வெப்பாலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர் அதில் சுதாகரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் யோவான் 42 என்பவர் ராணிப்பேட்டையில் வசித்து வருவார் அவர் அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று அவர் சொந்த கிராமமான வெப்பாலை கிராமத்துக்கு வந்து ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் உடனடியாக ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களை தள்ளிவிட்டு வரிசையில் முன் சென்று நின்று உள்ளார்.
அப்போது யோவானை வரிசையில் நின்ற பொதுமக்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது பொதுமக்களை மிரட்டும்படி யோவான் பேசியுள்ளார்.. இதனை பார்த்த சுதாகர் ஏன் இப்படி கூச்சலிடுகிறீர்கள் அசிங்கமாக பேசுகிறீர்கள் என யோவானிடம் கேட்டுள்ளார் இதற்கு யோவான் சுதாகரை பிடித்து தள்ளிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று கத்தியை கொண்டு வந்து சுதாகர் கழுத்தில் வைத்து அறுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார் .
இதில் சுதாகருக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் யோவானை பிடித்துக் கொண்டு சுதாகரை மீட்டு உள்ளனர்.இதுகுறித்து மேல்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரின் விரைந்து சென்று யோவானை மேல்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவலறிந்த ராமகிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி திருவலம் பொன்னை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சாலையில் அமர்ந்து வேண்டும் வேண்டும் எங்களுக்கு ரேஷன் கடை வேண்டும் எனவும் வேண்டும் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வேண்டும் என சாலை மறியல் ஈடுபட்டனர்..
இந்த தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் இதனால் எங்களுக்கு தனி ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை பலமுறை அதிகாரிகளுக்கு வைத்துள்ளோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து போலீசார் பொது மக்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் பேசியதை அடுத்து அவர்களை கலைந்து போக செய்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..