அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார் அந்த தேர்தலில் ஜோ பைடேன் வெற்றி அதிபரானார்.இந்நிலையில் மீண்டும் அடுத்து வரவுள்ள அதிபருக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா வைமீண்டும் சிறந்ததாகவும் பெருமை மிக்கதாகவும் மாற்ற வேண்டும் அதனால் அடுத்து வரவுள்ள 2024 ம் ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்யிட உள்ளேன் என்று கூறினார். இதனிடையே செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பழைய அமெரிக்காவை கொண்டுவரப்போவதாக கூறி அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என்ற அறிவிப்பால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்ன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்