பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளிவர உள்ளது. அதற்கான வியாபாரங்கள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் ஓவர்சீஸ் உரிமை மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் இரு படங்களும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரு படங்களின் வியாபாரங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜியன்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. அதே போல் வாரிசு படத்தின் உரிமையை லலித் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், துணிவு படத்தின் ஓவர்சீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு லைக்கா நிறுவனம் 13 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதன்மூலம் மிகவும் குறைவான விலைக்கு அஜித்தின் துணிவு ஓவர்சீஸில் விற்றுப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித்தின் ஓவர்சீஸ் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்துள்ளதா என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.