நான் முகப்பருவிற்கு குட் பை சொல்லிட்டேன்.., அப்போ நீங்க ? இதை ட்ரை பண்ணுங்க..
நம் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துகொள்ள நினைப்போம். ஆனால், முகப்பரு வந்து கெடுத்துவிடும். முகப்பரு வருவதற்கான காரணம் என்ன அதை எப்படி சரி செய்வது..? என்ற குழப்பம். முகப்பரு உள்ள அனைவருக்கும் இருக்கும். அதற்கான சில தீர்வு இதோ.
முகப்பரு வருவதற்கான முதல் காரணம். அதிக வகையான எண்ணெய் பொருட்களை உண்பது தான். எண்ணெய் வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வில்லை என்றாலும். உடல் சூடு, மரபணு மாற்றத்தால் இது ஏற்பட கூடும்.
ஒரு துண்டு உருளைகிழங்கை எடுத்து அரைத்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள்,கழித்து மிதமான சூடு உள்ள தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால். முகப்பரு மற்றும் தழும்புகள் மறைந்து விடும்.
முகப்பருவால் சிலருக்கு, கரும்புள்ளி ( Black Dots ) ஏற்படும். அதை சரி செய்ய தினமும் இரவு உறங்க செல்லும் முன் ஆலிவ் ஆயில் அல்லது, கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி கொண்டு மறுநாள் காலை முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால் கரும்புள்ளி இருந்த தடமே தெரியாத அளவிற்கு மறைந்து விடும்.
கற்றாழை ஜெல்லை இரவு முழுதும் பயன் படுத்த பிடிக்காதவர்கள். வேப்பங்கொழுந்து இலை, மஞ்சள், கற்றாழை ஜெல் 1ஸ்பூன், சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும். நன்கு கெட்டியாக பேஸ்ட் மாதிரி வரும். அதை முகப்பறு உள்ள இடத்தில் தேய்த்து, 20 நிமிடத்தில் முகத்தை கழுவி விட வேண்டும்.
ஒரு வாரம் இதை செய்தால் போதும். கரும்புள்ளி மறைந்து விடும்.
முகப்பரு வராமல் தடுக்க :
எண்ணெய் பலகாரங்கள், பாஸ்புட் உணவுகள், நன்கு எண்ணெயில் பொறித்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
குறைந்தது 4 முறையாவது தினமும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
தலைமுடியை பாதுகாக்கா விட்டாலும், முகப்பரு வரும். முக்கியமாக ஒரு சிறந்த தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்துக்கொள்ளுங்கள்.
Discussion about this post