மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ல் நடைபெற இருந்த I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. இக்கூட்டங்களில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஷிவ் சேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிட்கட்சிகளோடு 28 கட்சிகள் இந்தக் கூட்டத்திக் பங்கேற்றன.
இதனை தொடர்ந்து டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல் முதலில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகள் நடந்த இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.