கள்ள காதல் மோகம்..! மகளை கொன்ற தாய்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த ஆட்டுக்குளத்தை சேர்ந்த சமயமுத்து, மலர்விழி இவர்களுக்கு கயல்விழி (7) மற்றும் கார்த்திகா (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமயமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மலர் செல்வி தனது 5 வயது மகள் கார்த்திகாவை காணவில்லை என மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆட்டுக்குளம் அருகே உள்ள கிணற்றில் சிறுமி ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர்.., சிறுமி கார்த்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சிறுமியின் தாயிடம் சிறுமி வெளியே சென்ற நேரம்., மற்றும் எவ்வளவு நேரம் காணவில்லை என கேட்டுள்ளனர்..,
அதற்கு மலர்விழி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகித்த காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார். அப்போதே பல பகீர் தகவல்கள் வெளியானது.
சமயமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால்.., மலர் விழிக்கு அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சமயமுத்து என்பவருடன் கள்ளக்காதல் செய்து வந்துள்ளார். அந்த சம்பவத்தன்று மலர் விழி கள்ள காதலன் பாஸ்கரனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்..,
அப்போது விளையாடி வருவதாக சொன்ன சிறுமி.., திரும்பி வந்து பார்த்தபோது, தாய் வேறு ஒரு ஆணுடன் இருப்பதை கண்டு எங்கு வெளியில் சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததாக கூறியுள்ளார்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து ஒன்றும் தெரியாதது போல மகளை காணோமென நடித்து நாடகமாடியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலையில் வேறு யாரவது சம்மந்தப்பட்டுள்ளார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ