மீனாட்சி அம்மன் கோவிலில் அவமதிக்கப்பட்ட நடிகை நமீதா?
எங்கள் அண்ணா படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நமிதா. இந்த படத்திற்கு பிறகு, விஜய், அஜித், சரத்குமார் என்று பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், தற்போது பாஜகவில் இணைந்து, அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்தநிலையில், இவர் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சாமியை தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பெண் அதிகாரி ஒருவர், அவரது மதம் என்ன என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை நமிதா, தனது சமூக வலைதளத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கோவில்களில் இதுமாதிரி நடந்துக் கொள்வது வருத்தமாக உள்ளது என்றும், இந்தியாவில் உள்ள எந்தவொரு கோவில்களிலும், என்னிடம் யாரும் இவ்வாறு நடந்துக் கொண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபுவிடம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”