மனைவியை வெட்டி கொலைசெய்த கணவன்..!! கேரளாவில் நேர்ந்த சோகம்..!
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்த கொடைக்கானல் நீதிமன்றம்.
கேரளா மூணாறு பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 33, இவருக்கும் தாண்டி குடி பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருகின்றனர். சேகருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது .இதனால் சேகரின் நடவடிக்கை பிடிக்காமல் இவரது மனைவி தாண்டிக்குடி பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
சேகரையும் கேரளாவையும் விட்டு தாண்டிக்குடி பகுதிக்கு வந்து வாழும் படி கேட்டுள்ளார். சேகரும் அவ்வப்போது ராசாத்தியின் வீட்டிற்கு வந்து சமாதனம் செய்ய முயன்றுள்ளார். தனது ஊருக்கு வந்து தன்னுடன் வாழ மறுத்து வந்த மனைவியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பெரும்பாறை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டி உள்ளார்.
சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த பொது மக்கள்.., ரத்த வெள்ளத்தில் இருந்த ராசாத்தியை பார்த்து, போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார், ராசாத்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுபியுள்ளனர். ஆனால் ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
மனைவியை வெட்டிவிட்டு சேகர் அங்கிருந்து தலைமறைவு ஆகியிருக்கிறார்.., கொலை குறித்து விசாரணை தொடங்கிய போலீசார். சில நாட்களுக்கு முன் கேரள மாநிலத்தில் அடிதடி வழக்கு ஒன்றில் சேகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அந்த வழக்கை கேரள போலீசார் விசாரித்த போது சேகர் தனது மனைவியை வெட்டிவிட்டு தலைமறைவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதை அடுத்து இவரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று கொடைக்கானல் கோர்ட்டுக்கு வந்தது. வழக்கை விசாரித்த கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் மனைவியை வெட்டிவிட்டு தலைமறைவாகிய சேகருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
பத்தாயிரம் ரூபாய் கட்ட தவறினால் மேலும் ஆறு மாசம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post