காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருது அளிப்பார்கள் என பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
’ஜெய்பீம் திரைப்படத்திற்கு தேசிய விருதுகள் கொடுக்கப்படாதது பற்றி ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப்பிரபலங்களும் தங்களது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தியைக் கொன்றவர்கள், இந்தைய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தைக் கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?’ என கேட்டதோடு ‘ஜெய்பீம்’ குறித்தான மாராத்திய கவிதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இவர் மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர்கள் நானி, அசோக்செல்வன் உள்ளிட்டப் பலரும் ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கொடுக்காதது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
the ones who support murder of our Mahathma.. the ones who want to change Babasahebs Constitution..
will they CELEBRATE #JaiBhim ??? #justasking pic.twitter.com/QmTdI7EGPY— Prakash Raj (@prakashraaj) August 26, 2023