வேலூரில் குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சிக்கியது எப்படி..?
வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63), இவர் காட்பாடியில் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார், இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார், இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார். அதாவது நேற்று இரவு சரத்குமார் குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கும், தேவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் தேவராஜ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகன் மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் அறுத்துள்ளார்.
அதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்துள்ளார். அதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்க இதுகுறித்து வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சென்று விசாரணை செய்துள்ளனர்.
அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு, மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்தனர், குடிபோதையில் பெற்ற மகனே தந்தையை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post