கல்யாணம் முதல் பிறந்தநாள் வரை பங்ஷன் சின்னதோ, பெரிசோ மேக்கப் இல்லாமல் கலந்து கொள்ளும் பெண்களை பார்ப்பது அரிது. லிப்ஸ்டிக், மஸ்காரா, காஜல், பவுண்டேஷன் என இஷ்டத்துக்கு முகத்தில் பூசப்படும் மேக்கப் பொருட்களை முறையாக நீக்குவது மிக, மிக முக்கியமானது. இல்லையெனில் முகப்பரு, கரும்புள்ளி, தேமல், சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முகம் பொலிவிழக்கலாம்.
எனவே முறையாக மேக்கப்பை ரிமூவ் செய்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்…
மேக்கப் ரிமூவர் தேர்வு:
மேக்கப்பை அகற்றும்போது கவனமாக இருப்பது அவசியம். எனவே விலை சற்றே கூடுதலாக இருந்தாலும், சருமத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய கெமிக்கல் இல்லாத மேக்கப் ரிமூவரை பயன்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் சரும வகையின் அடிப்படையில் மேக்கப் ரிமூவரை தேர்வு செய்ய மறக்காதீர்கள். எண்ணெய் அல்லது சென்சிடீவ் ஸ்கின் உள்ளவர்கள் லேசான ஜெல் அடிப்படையிலான மேக்கப் ரிமூவர்களை தேர்வு செய்யலாம்.
மென்மையான துணி:
மேக்கப் ரிமூவரை பயன்படுத்த மென்மையான துணியை தேர்வு செய்ய வேண்டும். மேக்கப்பை அகற்றும் போது, முதலில் கண்கள், உதடுகள், புருவங்கள் போன்ற நிறமி பகுதிகளிலிருந்து மேக்கப்பை அகற்றுவது அவசியம். இவை அனைத்துமே முகத்தில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகள் என்பதால் காட்டன் பஞ்சு அல்லது மென்மையான துணியை பயன்படுத்துவது நல்லது.
ஷீட் மாஸ்க்குகள், டோனர்கள்:
டோனர்கள், ஷீட் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி மேக்கப் அப்ளிகேஷன்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம்.
ஃபேஸ்வாஷ்:
மேக்கப்பை ரிமூவ் செய்தால் மட்டும் போதாது, படுக்கைக்கு செல்லும் முன்பு சரியான ஃபேஸ்வாஷ் அல்லது மென்மையான சோப்பு கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
ஈரப்பதம்:
முகத்தில் அதிக நேரம் மேக்கப் உடன் இருப்பது சரும வறட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். மேலும் லிப்ஸ்டிக்கை அகற்றிய பின்னர் உதட்டிற்கு லிப்பாமும், முகத்திற்கு மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.a