வெய்யிலில் விளையாடும் குழந்தையின் சருமத்தை பாதுகாப்பது எப்படி ? இதோ சில டிப்ஸ்
குழந்தை என்றாலே குறும்பு என்று நாம் அனைவர்க்கும் தெரியும், அதிலும் 3 வயதிலிருந்து 6 வயது வரை உள்ள குழந்தைகளின் சேட்டைக்கு அளவே இல்லை.
அதிலும் சில குறும்பு கார குழந்தைகள் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். சாதாரண காலத்தில் அவர்களை நாம் கட்டு படுத்துவது கடினம். அதிலும் இப்போது கோடை விடுமுறை எந்த நேரமும் அவர்கள் வெயிலில் தான் அதிகம் விளையாடுகிறார்கள்.
அப்படி விளையாடும் சுட்டிகளின் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ் கொடுக்கிறார். சரும நல மருத்துவர் பூர்ணிமா.
சில பெற்றோர்கள் குழந்தைகள் வெளியே செல்லும் பொழுது சன் ஸ்கிரின் உபயோகிக்கிறார்கள். அதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு என்று தனி சன்ஸ்கிரின் கிடையாது. பெரியவர்கள் பயன் படுத்தும் சன்ஸ்கிரினை பயன் படுத்துவதால். UVA மற்றும் UVB கதிர்கள் தாக்கத்தை ஏற்றுக்கொள்ளாது.
இந்த UVA மற்றும் UVB கதிர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் சருமத்தை பாதுகாக்கும்.
குழந்தைகளை முடிந்த வரை வெயிலில் விளையாட விடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. முடியாத பட்சத்தில் வெயிலில் விளையாடும் குழந்தைக்கு வெள்ளரிக்காயை சாப்பிட கொடுக்கலாம். அது வயிற்றுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் குழந்தையின் முகத்தில் கெமிக்கல் இல்லாத சந்தனத்தை முகத்தில் 10 நிமிடம் தேய்த்து விடவும். சருமத்திற்கு குளிர்ச்சி அளிப்பதோடு, சருமத்தில் உள்ள கிருமியையும் அகற்றி விடும்.
முடிந்த வரை இந்த சமயத்தில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல், அவர்களுக்கு நல்ல கதை புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள் கொடுக்கலாம்.
இதனால் அவர்கள் வெளியிலும் செல்ல முடியாது, அறிவு திறனும் அதிகரிக்கும்.