புட்டரிசி பாயசம் செய்வது எப்படி..? சமையல் குறிப்பு -1
* புட்டரிசி எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் வருவதை தடுக்க உதவும்.
* ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
இப்படி உடலுக்கு நன்மை தரும் புட்டரிசி பாயசம் எப்படி செய்வது என்பது.., பற்றி பார்க்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள் :
1/4 கப் புட்டரிசி,
1/2 கப் வெல்லம்,
1 1/2 கப் பால்.
செய்முறை : 1/4 கப் புட்டரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதை மிஸ்யில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த புட்டரிசியை பாலில் சேர்த்து, அடிபிடிக்காமல் நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடம் கழித்து.., இடுக்கி வைத்த வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடத்தில் இறக்கி விட வேண்டும்.
பச்சை பால் சேர்க்க விரும்பாதவர்கள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல சமையல் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post