வெடி வெடிக்குறதுக்கு முன்னாடியே வேட்டு வெச்சா எப்படி..?
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 12- ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி அன்று, பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது..
இந்த இடைப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிகொடுத்தால்.., பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சொல்லியதால்.., கடை அதிகாலையில் திறக்க முடியாது.
பலரும் பொழுது விடிந்த பின்னரே பட்டாசு வாங்க வருவார்கள்.., இப்படி திடிரென பட்டாசு வெடிக்க கால அவகாசம் கொடுத்தால் மக்கள் என்ன செய்வது.. என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post