இயற்கை பழம், செயற்கை பழம் என கண்டுபிடிப்பது எப்படி? ஒரு ட்ரிக்..
கோடை சீசனுடன் போட்டி போடும் ஒரு சீசன் “மாம்பழம் சீசன்” தான், கோடை தொடங்கியதில் இருந்தே எல்லாம் இடத்திலும் மலைப்போல குவிந்து கிடக்கும்.
என்ன தான் வெளிநாட்டு பழங்கள் நம் நாட்டில் விற்பனை செய்தாலும்., சேலத்து மாம்பழத்திற்கு தனி மதிப்பு உண்டு. ஆனால் அப்படி விற்கப்படும் மாம்பழத்தில் கலப்படம் என்றால்..?
இயற்கையாக மரத்தில் பழுத்த மாம்பழத்தையும், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தையும் கண்டு பிடிப்பது எப்படி ? என்பதை பற்றி சில குறிப்புகளை பார்ப்போம்.
இயற்கையாக பழுத்த மாம்பழத்தில் வாசனை அதிகமாக இருக்கும். பழத்தில் சில இடங்களில் பச்சை, சிவப்பு போன்ற கலரில் தோல் இருக்கும். பழம் பெரிதாக இருந்தால் தோலின் பளபளப்பு குறைந்து விடும். அதன் அடிப்பகுதியில் அழுகிய தோற்றத்தில் இருக்கும். ஆனால் மாம்பழத்தின் சதை கெட்டியாக இருக்கும்.
செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில், வாசனை குறைவாக இருக்கும். பழம் முழுவதிலும் சிவப்பு, பச்சை என இருக்கும். பழம் சுவை இல்லாமல் இருக்கும். பழமும் பார்ப்பதற்கு கெட்டியாக இருக்கும். சிலர் வியாபாரத்தில் பணம் அடைய வேண்டும் என்ற நோக்கில், கார்பைடு கற்கள் பயன் படுத்தி, மாம்பழத்தை பழுக்க செய்கின்றனர்.
அதிலும் சந்தேகம் தீர வில்லை என்றால், பழத்தை வாங்கி, தண்ணீரில் போடவும். இயற்கை பழம் தண்ணீரில் மூழ்கி விடும், செயற்கை பழம் தண்ணீரின் மேலே மிதக்கும்.
இதனால் வாந்தி, வயிற்று போக்கு, நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும். இதில் கார்பைடு கற்கள் இருப்பதால் கர்பப்பை பாதிக்கும்.