தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா..! போலிஸுக்கு சவால் விட்ட ரவுடி..! போலீஸ் வைத்த ட்விஸ்ட்..!
தமிழ்நாடு முழுவதும் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் போதைப்பொருள் விற்பனை செய்வர்கள், ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வ்ருகின்றனர்.
அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ரிஷி கண்ணா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனனர்.
ரிஷி கண்ணாவின் கூட்டாளிகளான 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அப்படி இருக்க ரிஷி கண்ணா சமூக வலைத்தளமான “பேஸ் புக் லைவில்” வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது என சவால் விட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் ரிஷிகண்னா பேசியது, “காக்கி சட்டையெல்லாம் இப்ப தலையை பிச்சிக்கிட்டு இருப்பீங்க.. என்னை தேடுறதை விடுங்க. ஏன் என்ன தேடுறீங்க…? நான் இருக்கிற இடத்தை நானே சொன்னா ம ட்டும் தான் உங்களால் பிடிக்க முடியும். இப்போ தான் ஒரு வேட்டையை முடிச்சிட்டு காட்டுக்குள்ள வந்திருக்கிறேன்.
ஏய்… திருவொற்றியூர் போலீசு… என்னையா பிடிக்க பாக்குறீங்க… இன்னைக்கு இரவுக்குள்ள ஒரு கொலை நடக்கும் பார்க்குறீங்களா..?
நீங்க போலீசு.. நான் அக்யூஸ்டு என்னை உங்களால எதுவும் செய்ய முடியாது என்றும் காவலர்களை கெட்ட வர்த்தைகளாலும் பேசியுள்ளார் ரிஷி கண்ணா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. போலீசாருக்கே சவால் விட்டு வீடியோ வெளியிட்டது காவல்துறையினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை அடுத்து அந்த வீடியோவை பார்த்த காவலர்கள், ரவுடியின் நெட்வொர்கை ஹாக் செய்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைகள் முடிந்த பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மற்ற ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ