16 ஆண்டுகள் நிறைவு பெற்ற சுப்ரமணியபுரம்.. இன்றும் நம் மனதில்..!
சுப்ரமணியபுரம்:
கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்திருந்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சுவாதி ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜேம்ஸ் வசந்த இசையமைத்திருந்த இந்த படம் உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மக்கள் மனதில் சுப்ரமணியபுரம்:
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில படங்களே மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்து விடுகிறது.
அப்படி மனதில் இடம் பிடித்த சுப்ரமணியபுரம் கதை படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் ஆகியவற்றை எதர்தமாக நம் கண் முன்னே அழகாக கொண்டு வந்து இருப்பார் இயக்குநர் சசிகுமார்.
”கண்கள் இரண்டால்”:
இனி இது மாதிரியான கேங்ஸ்டர் திரைப்படம் தமிழ் சினிமாவில் மீண்டும் வருமா என்பது ஆச்சரிய குறிதான்!.. இந்த திரைப்படத்தை இன்னும் வர்ணம் சேர்த்த ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளிவந்த கண்கள் இரண்டால் பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த பாடல் ஒலிக்காத இடமும் இல்லை, நாளும் இல்லை. 80ஸ் முதல் 2k கிட்ஸ் வரை இந்த பாடலை முனுமுனுகாதவர்கள் யாரும் இல்லை.
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென...
16 ஆண்டுகள் நிறைவு:
இப்படி நம் மனதில் ஆணி அடித்த மாதிரி இடம் பிடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்றுடன் வெளிவந்து 16 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது, இதனை 16 years of சுப்ரமணியபுரம் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஹாஸ்டாகளை பகிர்ந்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்