அந்த மனசு தான் சார் கடவுள்..!! தளபதி விஜய் ரசிகர்கள் செய்த பாராட்டு செயல்..!!
எந்த நடிகரின் படம் திரையில் வெளியானாலும் ரசிகர்கள் நடிகர்களின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து.., தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துவது வழக்கம்..,
அந்த வகையில் வருகிற அக்டோபர் 19ம் தேதி நடிகர் விஜய்-ன் லியோ படம் பல தடைகளை தாண்டி சில விதிகளுடன் படம் வெளியாக உள்ளது..
இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரம் பகுதியில் “விஜய் மக்கள் இயக்கம்” ரசிகர்கள் விஜயின் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய மாட்டோம் ஆனால்.., அந்த பணத்தில் பல ஏழை குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களை செய்யப்போகிறோம் என அறிவித்துள்ளனர்..
அந்த வகையில் தளபதி விஜய் ரசிகர்கள் சென்னை இராயபுரம் பகுதி மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.. இவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் ரசிகர்கள்.., இது அவரின் படத்திற்கு எதிர்பிற்காக எடுத்த முடிவு அல்ல.., ஒருமுறை தளபதியே சொல்லி இருக்கிறார்..,
எனக்கு செய்யுற காசுல நான்கு ஏழை மக்களுக்கு உதவினால் போதும் அதுவே நீங்கள் எனக்கு செலுத்தும் அன்பிற்கு சமம் என தளபதி விஜய் சொல்லியதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்…
Discussion about this post