நடிகர் சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர் மதுரை விமான நிலையத்தில் பயணத்திற்காக சென்ற நிலையில் அங்கிருந்த சிஆர்பிஎஃப் அலுவலகர்கள் இந்தியில் பேச சொல்லி தங்களை துன்புறுத்தியதாகவும் இதனால் 0 நிமிடம் தங்களை காத்திருக்க வைத்ததாகவும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பணியாற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் பயணிகளை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்தும் செயல்கள் தொடர்ந்து வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி பிரபலங்களுக்கும் அவ்வப்போது நடப்பதை அறிய முடிகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர்களுடன் பயணம் செல்வதற்காக சென்றுள்ளார் அப்போது சிஆர்பிஎஃப் அலுவலர்கள் அவரையும் அவரது பெற்றோரையும் ஆங்கிலத்தில் பேச மறுத்து அவர்களை இந்தியில் பேசும் படி வற்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவரது பதிவில், ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினார்கள். இது மிகவும் மோசமான செயல். நாங்கள் எதிர்த்து கேட்டபோது இந்தியாவில் இது இப்படிதான் இருக்கும் எனப் பேசினார்கள். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள் என்றும் இதனால் தாங்கள் 0 நிமிடம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இது போன்ற செயல்கள் அவ்வப்போது நடப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.