கார்த்திகை தீபம் வரலாறு..!! பரணி கார்த்திகை தீபம் ஏற்றும் முறை..!!
கார்த்திகை தீபம் வரலாறு :
பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர்கள் என்ற விவாதம் ஏற்பட.. அவர்கள் சிவன் முன் சென்று முறையிட்டனர். அப்போது சிவன் தன்னுடைய அடிமுடியை காண்போரே பெரியவர் என சொல்கிறார்.
அப்போது விஷ்ணு வாராஹி பன்றி அவதாரம் எடுத்து பூமியின் அடிவரை சென்று முடியாமல் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.. அதன் பின் பிரம்மா அன்னப்பறவை அவதாரம் எடுத்து சிவனின் முடியை காண மேல் நோக்கி பறந்து சென்று அவராலும் முடியாமல் திரும்புகிறார்.. ஆனால் பிரம்மா அதனை ஒப்புக்கொள்ளாமல் சிவனிடன் பொய் சொல்கிறார்.. அதற்கு சாட்சியாக சிவனிடம் தாழம் பூவை கொண்டு வருகிறார்..
இதனை அறிந்த சிவன் கோபமடைந்து இனி என் பூஜைகளில் உன்னை சேர்த்துக்கொள்ளமாட்டேன் என தாழம் பூவிற்கு சாபம் கொடுக்கிறார். அதேபோல் பிரம்மாவிற்கும் பூமியில் எங்கும் கோவில்கள் எழுப்பப்படாது என்றும் சாபம் கொடுக்கிறார்.
ஆனால் விஷ்ணு பகவானிற்கு பூமியில் கோவில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என வரம் கொடுக்கிறார்..
அப்போது அவர்கள் இருவரும் முன் சிவபெருமான் அக்கினி வடிவில் காட்சிக்கொடுத்ததால் அந்த நாளையே நாம் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடுகிறோம்…
பரணி கார்த்திகை தீபம் :
இந்த நாளில் பரணி கார்த்திகை தீபம் மிகவும் விஷேசம் எனவே பிரம்ம முகூர்த்தம் வேளையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் செல்வம் செழித்து., லக்ஷ்மி கடகாஷம் அதிகரிக்கும். அதேபோல் பரணி தீபம் ஏற்றி வழிபட்டால் எமபயம் நீங்கும் என்பது ஐதீகம்.
5 அகல் விளக்குகளில் பஞ்சு திரி போற்று நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்..
பூஜை அறையில் மஞ்சள் கலந்த பச்சரிசியை தாம்புல தட்டில் கொட்டி அதன் மீது குபேரன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..