* ஆளுநர் எங்கு சென்றாலும் சனாதனத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை எனவும் அந்த அளவுக்கு அவருக்கு சனாதனத்தின் மீது பற்று உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் *
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோ பாலகிருஷ்ணன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்சா ஆகியோர் கலந்து கொண்டனர்
பின்னர் மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி :
பெரியாரிசம் மார்க்சிசம் இரண்டும் இணைந்து நடத்துவது தான் இந்த சனாதனம் ஒழிப்பு மாநாடு , பொருளாதார சமத்துவம் வேண்டும் சாதிய சமத்துவம் வேண்டும். இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் நடத்துகின்ற பிஜேபி ஆட்சியை எதிர்த்து நடத்தக்கூடியது தான் பொருளாதார சமத்துவமும் சமூக சமத்துவமும் சனாதனத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் கௌதம புத்தர் எனவும் மனுதர்மம் வர்ணாசிரமம் ஒன்று சனாதனம். காலை உணவு திட்டத்தை கூட சிலர் கிண்டல் அடிப்பதாகவும் கல்வி வளர வேண்டும் ஆரம்பக் கல்வி வளர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட தாகம்
தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறை குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் வருணாசிரமம் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவில் நிறத்தில் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும் ஏற்ற தாழ்வுகள் எந்த அடிப்படையில் இருக்கிறதோ அந்த அடிப்படையில் தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது.
புதிய கல்விக் கொள்கை என்று திட்டத்தை சொல்லிவிட்டு குலக்கல்வி முறையை கொண்டு வருவதாகவும் அதுதான் விஷ்வகர்மா எனவும் குலத் தொழிலை மீண்டும் கொண்டு வருவதற்கு தான் இந்த புதிய கல்விக் கொள்கை முறை . ஆணுக்குப் பெண் அடிமை என்று சனாதனத்தில் கூறியிருப்பதாகவும் அவள் ஆத்துலையும் என்று பிராமணிய குறிப்பிட்டு அங்கேயும் பெண்கள் அடிமையாக தான் உள்ளார்கள்.
சனாதனம் என்பது உயர்ஜாதி கீழ் ஜாதி யாருமே பெண் அடிமை ஆகியவற்றை எதிர்த்து தான் தற்போது நாம் குரல் கொடுத்து வருகிறோம். ஆளுநர் எங்கு சென்றாலும் சனாதனத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை அவருக்கு என்ன சனாதனத்திற்கு மேல் அவ்வளவு பற்று உள்ளது.
10% மேல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சனாதனத்திற்கு ஆதரவானது. காங்கிரஸ் கட்சியிலும் சனாதனக் கொள்கை உணர்வு இருந்ததால்தான் பெரியார் வெளியே வந்தார். திராவிட மாடல் என்பது பொருளாதார ரீதியாகவும் சமூக நீதியில் அனைவரும் சமம் என்பது வலியுறுத்துவது தான் இந்த திராவிட ஆட்சி. பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் என எத்தனை பேர் வந்தாலும் இன்னும் சாதி ஒழிக்க முடியவில்லை, தற்போது படிக்கின்ற மாணவர்களிடம் சாதிக்கு எதிரான மன தத்துவத்தை உருவாக்க வேண்டும்.
இலக்கியம் முற்போக்கு சிந்தனை குறித்து படிப்பவர்களின் ஆர்வம் குறைந்து விட்டதாகவும் தற்போது கைப்பேசி மூலமாக அதிகம் பேர் நேரத்தை செலவிடாமல் அதன் மூலமாகவும் சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை பரவைவிட முயற்சியில் ஈடுபட வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாக சனாதனத்திற்கு எதிரான கருத்துகளையும் மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என சனாதன கொள்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட கூட்டணி தான் இந்தியா எனவும் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும், இளைஞர்களிடம் மாணவர்களிடமும் சாதிக்கு எதிரான கருத்துக்களைக் சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்