தென்காசி குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!!
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் தென்காசி கிராம மக்களின் நலன் கருதி, குற்றாலத்திற்கு செல்ல தடை விதித்துள்ளது.
இன்று காலையும் அந்தப்பகுதியில் மழை பெய்து வருவதால்.., தெருக்கள் எங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Discussion about this post