மாநகராட்சி குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ்..!! அமைச்சர் துரைமுருகன் பதிலடி..!!
வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரியாக நடைபெறவில்லை புதிய தலைமை செயலகம் குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதற்கு தமிழக அரசுக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் “துரைமுருகன்” வேலூரில் பேட்டி
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், மாநகராட்சி ஆணையர் ரத்தின சாமி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடித்து சாலைகள் அமைத்தல் தெருவிளக்குகள் பராமரித்தல் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் அம்ருத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை ஆங்காங்கே கசிகிறது பழுதுகளை நீக்கி தண்ணீரை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவாக மக்களுக்கு செய்யும் நோக்கத்தில் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக முடிவு எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுவரையில் மாநகராட்சியின் பணிகளை முடிக்க 4 முறை கூட்டம் நடத்தியுள்ளோம். இன்னும் பணிகள் நடக்கவில்லை என்பது உண்மை தான் இன்னும் மாதம் தோறும் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளேன்.
அந்த கூட்டங்களில் எவ்வளவு பணிகளை செய்துள்ளனர் என ஆய்வு செய்வேன் இதே போன்று குடிநீர் தட்டுபாடில்லாமல் வழங்கவும் சாலைகள் அமைக்கவும் எடுத்து கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஆங்காங்கே குடிநீர் பைப் கசிவு ஏற்படுவதால் சிரமம் உள்ளது விரைவில் அதுவும் செய்து முடிக்கப்படும் காவிரி நீர் பிரச்சணை குறித்து உச்சநீதிமன்றம் வழக்கை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதில் தமிழகம் மீண்டும் எங்கள் வாதத்தை 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் வைப்போம் புதியதலைமை செயலகம் வழக்குகுறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு உரிய பதிலை நீதிமன்றத்திற்கு அளிப்போம் பழைய அதிமுக ஆட்சியில் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தான் சாலைகள் சரியில்லாததற்கு காரணம் என்று கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..