தலைமறைவான பாஜக நிர்வாகி..! பதவியும் பறிபோனது..!! ஏன் தெரியுமா..?
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அரியானா பாஜக முன்னாள் அமைச்சருமான சந்தீப் சிங் தடகள பெண் பயிற்சியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததின் பெயரில் சண்டிகர் போலீசார் ஐபிசியின் 354, 354 ஏ, 354 பி, 342, 506, 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு சண்டிகர் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சந்தீப் சிங்கிற்கு எதிராக 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இவர் மீது குற்றங்கள் இருப்பினும் இந்த வழக்கை மே மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்த மகுடீஸ்வரன் தற்போது பாஜகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை புகாரில் திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பழனி அருகே சாமிநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவு திட்ட பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
அதனையடுத்து கட்சியின் உறுப்பினராக உள்ள மகுடீஸ்வரனை பதவி நீக்கம் செய்யுமாறு அண்ணாமலையை கேட்டுக் கொள்கிறேன் என திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதம் விசாரணை செய்யப்பட்டு தற்போது அவரை பாஜகவில் இருந்து பதவி நீக்கும் செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்யக்கோரி உத்தரவிட்டதால், தலைமறைவாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.