கேரளாவில் தொடர்மழை காரணமாக தொடுபுழா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் பருவமழை பெய்துவரும் நிலையில் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இடுக்கி, கோட்டையம், காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்று அதிகாலை தொடுபுழாவில் சோமன் என்பவரின் வீடு தகர்ந்ததில் அவரது தாயார், மகன் உடல்களை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றன.
அப்பகுதியில் மழை தொடர்ந்து நீடிப்பதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்ற அபாயம் உள்ள நிலையில் அப்பகுதி மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.