தமிழகத்தில் நாளை(மார்ச்.05) முதல் மார்ச் 09 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது. 13 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணிநேரத்தில் நெருங்கும்.
இந்த காற்றுழத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் இன்று(மார்ச்.05) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை(மார்ச்.06) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (மார்ச்.07) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
(மார்ச்.08) ஆம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
காற்றுழத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.