நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிதான் காரணம் என ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நேற்று(மார்ச்.04) மாலை சசிகலாவை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என்ன முதல்வர் மு.க.ஸ்டாலினையா சந்தித்தேன்..? அதிமுகவுக்கு சசிகலா தலைமைதான் தேவை.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிதான் காரணம்.
தனது விருப்பப்படியே சசிகலாவை சந்தித்தேன். சந்திப்பு பற்றி ஓ.பன்னீர்செல்வதிடம் தெரியப்படுத்தவில்லை.அதிமுக தரைமட்டத்திற்க்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர்கள் தொண்டர்களை பற்றி நினைப்பதேயில்லை.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது. என்னை கட்சியை விட்டு நீக்க இவர்கள் யார்..? எனக்கு சசிகலா தான் பொதுச்செயலாளர் என தெரிவித்துள்ளார்.