சென்னை புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கிய குற்றச்சாட்டில் சிறை மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி மூலம் பண மோசடியில் செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக சிறை மருத்துவர் நவீன் மானாமதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பப்ஜி மதன் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ சிறைக்காவலர் ஒருவர் மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது