வங்கக்கடல் மற்றும் இலங்கையொட்டிய கடற்பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் திடீரெனெ மழையின் தேர்வீரம், குறைந்தது.தற்பொழுது வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதனால் தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது இலங்கை மற்றும் வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் டிசம்பர் 29ம் தேதி வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு நாடுகளுக்கு மெகா மூட்டத்துடனும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.