அமெரிக்காவில் வழக்கத்தை விட அதிகமாக பனி பொழிந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பனிப்புயல் வீச தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் இந்த பனிப்புயலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையம் உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேரிக்காவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவின் தீவிரம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல் மாகாணங்களில் உள்ள நகரங்களில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த பனிபுயலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 26 பேர் இந்த பனிப்புயலில் சிக்கி உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கவே கொரோனாவால் நெருக்கடியில் இருக்கும் அமெரிக்கா தற்போது பனிபொழிவிலும் பேரிடரை சந்தித்து வருகிறது.