உத்தரகாண்ட் கனமழை..! சிக்கிய 2 குழந்தைகள்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
கனமழை காரணமாக ஹரித்வார் அருகே உள்ள போரிதோரா பகுதியில் பழமையான வீட்டின் கூரை நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதில், 11 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக அதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ஹரித்வார் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்த நிலையில் பரிதாபமாக மீட்கப்பட்டனர்.
அதேபோல் ஹரித்வார் மாவட்டத்தின் ரூர்க்கிக்கு அருகில் உள்ள பார்பூர் கிராமத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்துள்ளது, அதில் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட பின்னர் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.