திருக்கோஷ்டியுர் நாராயண பெருமாள் கோவில் பிறமோற்சவம்…!!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருக்கோஷ்டியூர் நாராயண பெருமாள் கோவிலில். ஆண்டு தோறும் இக்கோவிலில் பிரமோத்ஸவம் 12 நாட்களுக்கு நடைபெறும்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 7:45 மணிக்கு தீப ஆராதனைகளும், சிறப்பு மண்டல பூஜைகளும் நடைபெற்றன, பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியாருடன், பூ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பின்னர் 11:05 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்து, பூஜித்து, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு காப்பு கட்டி, ஹோமம் வளர்த்தனர்.
ஹோமத்தினை தொடருந்து. யாக சாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை பெருமாளுக்கு அலங்கரம் செய்யப்பட்டு, வீதி ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று ராமானுஜரின் 1006வது பிறந்த நாள் என்பதால். மங்களாசாசனம் பூஜை நடைபெற்றது. நேற்று மதியம் 12மணி அளவில் ராமானுஜர் சன்னதியிலிருந்து, கல்யாண மண்டபத்தின் முன் காட்சி கொடுத்தார். எனவே இருவருக்கும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. நாலாயிர திவ்ய பிரபந்த முறைப்படி கோஷ்டி விநியோகம் நடைபெற்று விழா சிறப்பாக முடிந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..