தமிழகத்தில் தொடரும் கனமழை..! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்..!
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக தற்போது கனமழை பெய்துவருகிறது. இன்று காலை பெய்த கனமழை நிலவரப்படி இயல்பை விட 87% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கிய கனமழை முதல் ஜூலை 18ம் தேதி வரை 164.1 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 18) வரை தமிழ்நாட்டில் 164.1 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 87.5 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88% அதிகமாக பெய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..