ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! அதிமுக நிர்வாகி மலர்க்கொடி நீக்கம்..!
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் அந்த வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, செம்பியம் தனிப்படை போலீசார், போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்தனர். அதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை, ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது தப்பி ஓட முயன்றதாக காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அதையடுத்து போலீஸ் காவலில் வைத்து 10 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய பின் மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அந்த கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் களாக கருதப்படும் மூன்று பேரையும் மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
மேலும் அந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்..? கூலிப்படைக்கு எவ்வளவு பணம் கைமாற்றபட்டது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு சமீபத்தில் 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், அதிமுக மலர் கொடியின் வங்கி கணக்கில் மிகப்பெரிய அளவில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரிய வந்தது. அதுதொடர்பாக சென்னையை சேர்ந்த அதிமுக மலர்கொடியை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தி வந்தனர்.
அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்., கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..