“இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவேன்”.. இரணுவ வீரரின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர்.. இறுதியில்..!
ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியை சேர்ந்த இராணுவ வீரரான அஜய் சிங் நருகா என்வருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 4 பேரில் ஒருவரான அஜய் சிங் நருகா துப்பாக்கி சூடு சண்டைக்கு முன்பாக தன் குடும்பத்தினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் எனக்கு ஊருக்கு வர அனுமதி கிடைத்துள்ளதால் நான் வரும் 20 ம் தேதி வருகிறேன் என்று குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதை கேட்ட குடும்பத்தினர் அவர் வருவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் அவருடைய சடலம் நேற்றிரவு வீட்டிற்கு வந்தது.
ஆசையாக குடும்பத்தினரை பார்க்க வருவதாக கூறிய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த நிலையில் சடலமாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து சடலத்தை பார்த்த குடும்பத்தினர்கள் கதறி துடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”