யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொன்ன மோடி..! அதை மட்டும் ஏன் சுட்டிக்காட்ட வில்லை..?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தியானத்தை செய்தார்.
அதன் பின்
“பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”,
எனும் திருக்குறளை தமிழ்நாட்டில் பேசிய மாண்புமிகு மோடி அவர்கள்
வானுயர்ந்த திருவள்ளுவர் சிலைக்கு
மலர் அஞ்சலி செலுத்தி விட்டு டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
பொன்மொழி :
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”
(பொருள்; எல்லா ஊரும் எனது ஊரே எல்லா மக்களும் எனது உறவினர்களே) என்ற கணியன் பூங்குன்றனாரின்
வைர வரிகளை தமிழ் மொழியின் சிறப்பை உலக அரங்கில் மோடி அவர்கள் பேசினார்.
அடுத்த வரியான
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”
பொருள்; உனக்கு வரும் தீமையானாலும் நன்மையானாலும் அது அடுத்தவரால் வருவதில்லை அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க.
இதை அவர் சுட்டிக்காட்ட வில்லை.
காரணம் :
இதை இங்கே குறிப்பிட காரணம் கடந்த ஒரு வாரமாக ஒடிசா தேர்தல் பரப்புரையில் நம் நாட்டின் பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர்
அமித் ஷா அவர்களும்
“ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.
இங்கு ஒரு தமிழரை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல் இது.
ஒரு தமிழர் திரை மறைவில் இருந்து அரசை வழி நடத்துவதை நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா” என்று
கடுமையாக தமிழர்களை சாடி பேசினார்கள்.
ஒடிசா :
ஒடிசா மாநிலத்தை கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி முதல் இன்று வரை 25 ஆண்டுகளாக மாண்புமிகு நவீன பட்நாயக் தொடர்ந்து ஐந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் போற்றும் முதல்வராக ஆட்சி செய்து சாதனை படைத்துள்ளார்.
முதல்வரின் எண்ணங்களை சரியாக புரிந்து கொண்டு அடிமட்ட ஒடிசா மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் பேரன்பை திரு.V. K. பாண்டியன் IAS பெற்று வருகிறார்.
ஐஏஎஸ் பதவி ராஜினாமா :
நவீன் பட்நாயக் அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணியை திறன்பட செயல் படுத்தி ஒடிசா மக்களின் அன்பை பெற்று இத்தேர்தலில் முதன்மை பிரச்சாரராக செயல்படுகின்றார்.
திரு V.K. பாண்டியன் அவர்கள் திருமணம் செய்து இருப்பது ஒடிசாவை சேர்ந்த சுஜாதா ஐஏஎஸ் அவர்களை.
தமிழ்நாட்டு மக்கள், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மலையாளி என்று தெரிந்தும் 1977 ல் இருந்து 1987 அவர் இறக்கும் வரை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்து அன்பு பாராட்டியவர்கள்
தமிழர்களே கர்நாடகாவில் பிறந்து இருந்தாலும்தமிழக மக்களால் அம்மா என்றும், இரும்புப் பெண்மணி என்றும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அம்மையார் அவர்களை நான்கு முறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக தேர்வு செய்தவர்களும் தமிழர்களே.
மராட்டிய மாநிலத்தில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் வளர்ந்து தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினிகாந்த் அவர்களையும் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டு தான் உள்ளது.
ஒரு காலத்தில் உலகத்தையே ஆண்ட இங்கிலாந்தை தற்போது பிரதமராக ஆட்சி செய்பவர் இந்திய வம்சாவளியை சார்ந்த பஞ்சாபியரான ரிசிசுனக்.
ரிசிசுனக் திருமணம் செய்திருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாமூர்த்தியை.
நிறவெறிக் கொள்கை உள்ள இங்கிலாந்தே ரிசிசுனக்கை பிரதமராக ஏற்றுக் கொண்டு விட்டது.
சிங்கப்பூரில் 1998 முதல் 2011 வரை தமிழரான S R.நாதன் அவர்கள் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்தார்.
நம் நாடான இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் மொழியையும் தமிழரின் பெருமையும் பேசிவிட்டு இன்னொரு மாநிலத்தில் தமிழர்களை அவதூறு பரப்புவது எவ்விதத்தில் நியாயம்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை எனக்கு பின்னால் மக்கள் யாரை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே தலைவர் என்று அறிவித்துவிட்டார்.
2024 தேர்தல் முடிவில் ஒடிசாவில்
மாண்புமிகு நவீன் பட்நாயக் அவர்களின்
BJD கட்சி வெற்றி பெற்றால் மக்கள்
யார் பக்கம் என்பது தெரியும்.
நாளை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மதிமுகம்-இல் இணைந்திடுங்கள்.
– லோகேஸ்வரி. வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..